Fifa World Cup: செக் குடியரசை தட்டித் தூக்கிய தென் கொரியா.. 2ஆம் லீக்கில் அபார வெற்றி

க்ரெஜ்ஸி, 59வது நிமிடத்தில் கோல் அடித்து அணியின் கணக்கை தொடங்கினார்.
Fifa World Cup
Fifa World Cup
Published on

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர் இன்று கோலாகலமாக தொடங்கியது.

2வது லீக்

தொடரின் முதல் போட்டியில் மெக்சிகோ மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் தென் ஆப்பிரிக்கா அணியை மெக்சிகோ 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இதைத்தொடர்ந்து இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கிய 2வது லீக் போட்டியில் செக் குடியரசை தென் கொரியா எதிர்கொண்டது.

ஆட்டத்தின் முதல் பாதி யாருக்கும் சாதகம் இல்லாமல் 0-0 என்ற கணக்கில் முடிந்தது. இதனால் இரண்டாம் பாதி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களை ஆட்கொண்டது.

இரண்டாம் பாதி

அதை வலுப்படுத்தும் விதமாக இரண்டாம் பாதியில் செக் குடியரசின் லாடிஸ்லாவ் க்ரெஜ்ஸி 59வது நிமிடத்தில் கோல் அடித்து அணியின் கணக்கை தொடங்கினார்.

ஆட்டம் 1-0 என்ற நிலையில் தொடர 67வது நிமிடத்தில் அதிரடி காட்டிய தென் கொரிய வீரர் ஹ்வாங் இன்போம் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார்.

முதல் வெற்றி

இதன் மூலம் தென் கொரிய வீரர்களிடம் புது நம்பிக்கை பிறக்க ஆட்டத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்று 80வது நிமிடத்தில் 2-1 என்ற கணக்கில் முன்னேறினர். ஓ ஹியான் கியூ அடித்த கோலால் இது சாத்தியப்பட்டது.

எட்டிய முன்னிலையை விட்டுக்கொடுக்காமல் இறுதிவரை களமாடிய தென் கொரியா, செக் குடியரசுக்கு கோல் அடிக்க சின்ன சான்ஸ் கூட கிடைக்க விடாமல் பார்த்துக்கொண்டது.

ஆட்டத்தின் முடிவில் செக் குடியரசை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தொடரில் தனது முதல் வெற்றியை தென்கொரியா பதிவு செய்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com