உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் முறை... இப்படியும் சாதனையா?

உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடரின் முதல் போட்டியில் மெக்சிகோ, தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் முறை... இப்படியும் சாதனையா?
Published on

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர் கோலாகலமாக தொடங்கியது. பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்தத் தொடரின் முதல் போட்டியில் மெக்சிகோ மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய தொடரின் முதல் போட்டி என்பதால் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இரு அணிகளும் களம் கண்டன.

புகழ்பெற்ற எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் ஒன்பது வீரர்களுடன் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணியை மெக்சிகோ 2-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்தத் தொடரின் தொடக்க கோலை ஜூலியன் குவினோன்ஸ் அடிக்க, அனுபவமிக்க ரவுல் ஜிமெனெஸ் இரண்டாவது கோலை அடித்தார்.

இதன்மூலம், 'ஏ' பிரிவில் இருந்து தகுதிபெறுவதற்கான மெக்சிகோ நாட்டின் முயற்சி சுமுகமாக தொடங்கியது. இந்தப் போட்டியில் மொத்தம் மூன்று ரெட் கார்டுகள் காட்டப்பட்டன. ஸ்பெபெலோ சிதோல் மற்றும் தெம்பா ஸ்வானே ஆகியோர் வெளியேற்ற காரணத்தால், தென் ஆப்பிரிக்கா அணி ஒன்பது வீரர்களுடன் ஆட்டத்தை முடித்தது.

இதோடு, கூடுதல் நேரத்தில் மெக்சிகோவின் சீசர் மான்டெஸும் ரெட் கார்டு பெற்றார். இதன் காரணமாக உலகக் கோப்பை கால்பந்து தொடரின் வரலாற்றில் முதல் முறையாக, ஒரு உலகக் கோப்பை தொடரின் தொடக்கப் போட்டியில் மூன்று ரெட் கார்டுகள் வழங்கப்பட்ட போட்டியாக இது மாறியது.

X

Maalai Malar
www.maalaimalar.com