யான் டியோமாண்டேவை 1474 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யும் ரியல் மாட்ரிட்

ஐவரி கோஸ்ட் நாட்டைச் சேர்ந்த இவரை, பிஎஸ்ஜி அணியும் வாங்க ஆர்வம் காட்டியது.
Yan Diomande
யான் டியோமாண்டே
Published on

ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியான ரியல் மாட்ரிட், யான் டியோமாண்டேவை இந்திய பண மதிப்பில் சுமார் 1474 (153.8 மில்லியன் டாலர்) ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரியல் மாட்ரிட்

தற்போது யான் டியோமாண்டே ஆர்.பி. லெய்ப்சிக் அணிக்காக விளையாடி வருகிறார். இது மட்டும் உறுதியாகி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டால் ரியல் மாட்ரிட் அணிக்காக அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் என்ற பெருமையை பெறுவார். பெலிங்கம் (பொருஸ்சியா டார்ட்மண்ட் மற்றும் ஏடன் ஹசார்ட் (செல்சி) ஆகியோர் இதற்கு முன்னதாக அதிக தொகைக்கு ஒப்பந்தம் ஆனார்கள்.

யான் டியோமாண்டே கடந்த வந்த பாதை

இவர் இரண்டு வருடத்திற்கு முன்னதாக பிளோரிடாவில் உள்ள டேடோனா பீச்சில் டி.எம்.இ. அகாடமியில் விளையாடினார். 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த லெகனெஸ் அணியில் இணைந்தார். 6 மாதம் கழித்து லெய்ப்செக் அணியில் ஒப்பந்தம் ஆனார்.

ஜெர்மனியில் நடைபெறும் பண்டேஸ்லிகா லீக்கில் கடந்த சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புள்ளிகள் பட்டியலில் லெய்ப்சிக் 3-வது இடம் பிடித்தது.

உலக கோப்பையில் யான் டியோமாண்டே

ஐவரி கோஸ்ட் நாட்டைச் சேர்ந்த யான் டியோமாண்டே, உலக கோப்பையில் 4 போட்டிகளில் விளையாடினார். ஒரு கோல் அடிக்க உதவியாக இருந்தார். ரவுண்ட் ஆஃப் 32-ல் நார்வேயிடம் ஐவரி கோஸ்ட் தோல்வியடைந்தது.

ரியல் மாட்ரிட் அணிக்கு முன்னதாக பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) இவரை ஒப்பந்தம் செய்ய அதிக ஆர்வம் காட்டியது.

மான்செஸ்டர் சிட்டி மிட்ஃபீல்டர் ரோட்ரியை ஒப்பந்தம் செய்வதற்கான தங்கள் வாய்ப்புகள் குறித்து மாட்ரிட் அணியும் இப்போது நம்பிக்கையுடன் உள்ளது.

ஸ்பெயினின் உலகக் கோப்பை வென்ற கேப்டனின் காயங்கள் குறித்த குறித்து முன்பு கவலை தெரிவித்திருந்தாலும், அவரைத் தங்கள் அணிக்குக் கொண்டுவருவதற்கான முயற்சியை மாட்ரிட் அணி இப்போது நிராகரிக்கவில்லை.

மாட்ரிட் அணி ஏற்கனவே மார்க் குகுரெல்லா, இப்ராஹிமா கோனாடே, பெர்னார்டோ சில்வா மற்றும் டென்சல் டம்ஃப்ரைஸ் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் லா லிகா லீக்கில் ரியல் மாட்ரிட்- பார்சிலோனா இடையே சாம்பியன் பட்டத்திற்கு கடும் போட்டி நிலவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com