ஸ்பெயின், மொராக்கோ, போர்ச்சுக்கல் நாடுகளில் அடுத்த உலக கோப்பை போட்டி..!

23-வது உலக கோப்பை வட அமெரிக்கா கண்டத்தில் 3 நாடுகளில் நடைபெற்ற நிலையில், அடுத்த உலக கோப்பை ஐரோப்பியாவில் உள்ள 3 நாடுகளில் நடைபெற இருக்கிறது.
2030 FIFA WORLD CUP
2030 உலக கோப்பை
Published on

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. அடுத்த உலக கோப்பையான 24-வது போட்டி தொடர் மொராக்கோ, போர்ச்சுக்கல், ஸ்பெயினில் 2030-ம் ஆண்டு ஜூன் 8-ந்தேதி முதல் ஜூலை 21-ந்தேதி வரை நடக்கிறது.

1930-ம் ஆண்டு உலக கோப்பை உருகுவேயில் அறிமுகம் செய்யப்பட்டது. 100-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக, 1930 இறுதிப் போட்டி நடைபெற்ற உருகுவேயின் மான்டிவீடியோவில் உள்ள எஸ்டாடியோ சென்டனா ரியோ மைதானம், அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்சில் உள்ள எஸ்டாடியோ மானுமென்டல், பராகுவேயின் அசுன்சியோனில் உள்ள எஸ்டாடியோ ஒஸ்வால்டோ டொமிங்கஸ் டிப் ஆகிய மைதானங்களில் தலா ஒரு ஆட்டம் என ஒரு சிறப்புப் போட்டியும், கொண்டாட்டமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒன்றுக்கு மேற்பட்ட கண்டங்களில் போட்டி

ஒன்றுக்கு மேற்பட்ட கண்டங்களில் போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். மொராக்கோ, பராகுவே, போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் முதல் தடவையாகவும், உருகுவே (1930-க்கு பிறகு), அர்ஜென்டினா (1978-க்கு பிறகு) ஸ்பெயின் (1982-க்குபிறகு) ஆகிய நாடுகளில் 2-வது முறையாகவும் நடைபெற உள்ளது.

ஸ்பெயின் நாட்டில் கொண்டாட்டம்

ஐரேப்பிய கால்பந்து போட்டியின் சாம்பியனான ஸ்பெயின் அணி அர்ஜென்டினாவை வீழ்த்தி 2-வது முறையாக உலக கோப்பைபை கைப்பற்றியது. ஸ்பெயின் அணியின் இந்த வெற்றியை அந்நாட்டு மக்கள் திருவிழாபோல் கொண்டாடினார்கள். தலைநகர் மாட்ரிட் உள்பட பல்வேறு நகரங்களின் கால்பந்து ரசிகர்கள் நடனமாடி வெற்றியை உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டனர். மாட்ரிட் நகரில் உள்ள பிளாசா டிகெலான் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.

நேற்று நள்ளிரவு உடன் முடிவடைந்த 23-வது உலக கோப்பை கோப்பை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் நடைபெற்றது. இதில் 48 அணிகள் பங்கேற்றன. குரூப் சுற்று, ரவுண்ட் ஆஃப் 32, ரவுண்ட் ஆஃப் 16, காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டி என போட்டிகள் நடைபெற்றன. இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா- ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஸ்பெயின் 1-0 என வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

X

Maalai Malar
www.maalaimalar.com