உலகக்கோப்பை கால்பந்து.. பரிசுத்தொகை, கோல்டன், சில்வர் விருதுகள் முழு விவரம்

ஸ்பெயின் அணியின் 19 வயதான பாவ் குபார்சி,'சிறந்த இளம் வீரர்' விருதை வென்றுள்ளார்.
உலகக்கோப்பை கால்பந்து
உலகக்கோப்பை கால்பந்து
Published on

23-ஆவது உலகக் கோப்பை கால்நது தொடரின் இறுதிப்போட்டியிஸ் அர்ஜென்டினா அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்ற ஸ்பெயின் அணிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கோப்பையை வழங்கினார்.

அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் மைதானத்தில் இந்த இறுதிப் போட்டி நடந்தது. இதில் அர்ஜென்டினாவை வீழ்த்தியதன் மூலம் ஸ்பெயின் அணி 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

பரிசுத்தொகை

உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி ஸ்பெயின் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.4,814 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

2வது இடம் பிடித்த அர்ஜென்டினா அணிக்கு 33 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.3,177 கோடி) பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

விருதுகள்

ஒட்டுமொத்தமாக தொடரில் தனிநபர் சாதனைகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் கீழ் வருமாறு,

கோல்டன் பால் (Golden Ball)

தொடரின் சிறந்த வீரருக்கான 'கோல்டன் பால்' விருதை ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரர் ரோத்ரி வென்றார்.

மான்செஸ்டர் சிட்டி கிளப்பை சேர்ந்த இவர் தொடர் முழுவதும் ஸ்பெயின் அணியின் நடுகள (Midfield) வீரராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது சிறந்த வீரருக்கான விருதான 'சில்வர் பால்' அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது.

பிரான்ஸ் கேப்டன் எம்பாப்பே சிறந்த வீரர்களில் 3வது இடம் பிடித்து Bronze ball வென்றார்.

கோல்டன் க்ளவ் (Golden Glove)

தொடரின் சிறந்த கோல்கீப்பருக்கான 'கோல்டன் க்ளவ்' விருதை ஸ்பெயினின் கோல்கீப்பர் உனாய் சிமோன் தட்டிச் சென்றார்.

இத்தொடரில் ஸ்பெயின் அணி ஆடிய 8 போட்டிகளில், வெறும் ஒரே ஒரு கோலை மட்டுமே எதிரணிக்கு விட்டுக்கொடுத்து, 7 போட்டிகளில் ஒரு கோல் கூட விழாமல் தடுத்து சாதனை படைத்தார்.

மேலும், உலகக்கோப்பை வரலாற்றிலேயே தொடர்ச்சியாக 650 நிமிடங்கள் எதிரணியினரை ஒரு கோல் கூட அடிக்கவிடாமல் தடுத்த புதிய உலக சாதனையையும் உனாய் சிமோன் படைத்துள்ளார்.

கோல்டன் பூட் (Golden Boot)

இறுதிப்போட்டியில் லியோனல் மெஸ்ஸி கோல் எதுவும் அடிக்காத நிலையில், பிரான்ஸ் அணி கேப்டன் எம்பாப்பே தனது இரண்டாவது 'கோல்டன் பூட்' விருதை வென்றார்.

இதன் மூலம், ஒன்றுக்கும் மேற்பட்ட உலகக் கோப்பைகளில் அதிக கோல் அடித்த வீரராக திகழும் முதல் வீரர் என்ற பெருமையை இந்த எம்பாப்பே பெற்றார். நான்காவது இடத்தைப் பிடித்த பிரான்ஸ் அணிக்காக எம்பாப்பே மொத்தம் 10 கோல்களையும் நான்கு 'அசிஸ்ட்'களையும் (கோல் அடிக்க உதவிய வாய்ப்புகள்) பதிவு செய்தார்.

மறுபுறம், தனது கடந்த 12 உலகக் கோப்பை ஆட்டங்களில் முதல் முறையாக கோல் அல்லது 'அசிஸ்ட்' எதுவும் இல்லாமல் ஆட்டத்தை முடித்த மெஸ்ஸி, மொத்தம் எட்டு கோல்கள் மற்றும் நான்கு 'அசிஸ்ட்'களுடன் போட்டியை நிறைவு செய்தார்.

பட்டியலில் 2-வது இடம் பிடித்து 'சில்வர் பூட்' விருதை மெஸ்ஸி வென்றுள்ளார்.

சிறந்த இளம் வீரர்

சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணியின் 19 வயதான பாவ் குபார்சி, 2026 பிபா உலகக் கோப்பை தொடரின் 'சிறந்த இளம் வீரர்' விருதை வென்றுள்ளார்.

இந்த விருதுக்கான போட்டியில், தனது அணியின் நட்சத்திர வீரரான லமின் யமாலை பின்னுக்கு தள்ளி அவர் இந்த உயரிய அங்கீகாரத்தை கைப்பற்றியுள்ளார்.

இதன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் 'சிறந்த இளம் வீரர்' விருதை வென்ற மிகவும் இளம் வீரர்களில் ஒருவராக பாவ் குபார்சி இடம்பிடித்துள்ளார்.

ஃபேர் பிளே (Fair play) விருது

தொடர் முழுவதும் எவ்வித விதிமீறல்களும் இன்றி, ஒழுக்கத்துடன் சிறந்த விளையாட்டு திறனுடனும் விளையாடிய நெதர்லாந்து அணிக்கு இந்த ஆண்டிற்கான 'பிஃபா ஃபேர் பிளே' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com