வானுக்கும் எல்லை உண்டு நட்பிக்கில்லையே.. ரோகித்- தவான் நடனமாடி மகிழ்ந்த வீடியோ வைரல்

பஞ்சாப் - மும்பை போட்டிக்கு முன்னதாக் ரோகித் மற்றும் தவான் சந்தித்து கொண்டனர். இருவரும் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வானுக்கும் எல்லை உண்டு நட்பிக்கில்லையே.. ரோகித்- தவான் நடனமாடி மகிழ்ந்த வீடியோ வைரல்
Published on

முல்லாப்பூர்:

10 அணிகள் இடையிலான 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை சந்தித்தது. தோள்பட்டை காயத்தில் இருந்து ஷிகர் தவான் இன்னும் மீளாததால் சாம் கர்ரன் பஞ்சாப்பின் கேப்டன் பொறுப்பை கவனித்தார்.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 192 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 19.1 ஓவர்களில் 183 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் மும்பை அணி 9 ரன் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை சுவைத்தது.

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக ரோகித் சர்மாவும் தவான் சந்தித்து கொண்டனர். சந்தித்து கொண்ட இருவரும் கட்டியணைத்து தங்களது அன்பை வெளிப்படுத்தி கொண்டனர். மேலும் தவானை பார்த்த சந்தோசத்தில் ரோகித் நடனமாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பஞ்சாப் அணி தோல்வியடைந்த பிறகு தவான் மற்றும் ரோகித் தோளில் கை போட்டு சிரித்து பேசி மகிழ்ந்த புகைப்படமும் வைரலாகியது.

இந்திய கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் இணைந்து பல நல்ல தொடக்கத்தை கொடுத்து இருக்கிறார்கள். இந்த ஜோடி 2013-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 5148 ரன்கள் இணைந்து குவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com