உலக கோப்பையில் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவதே இலக்கு- இலங்கை சுழற்பந்து வீச்சாளர்

ஒருநாள் உலக கோப்பை தொடர் அக்டோபர் 5-ந் தேதி தொடங்குகிறது.ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் என்னால் வீழ்த்த முடியவில்லை.
உலக கோப்பையில் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவதே இலக்கு- இலங்கை சுழற்பந்து வீச்சாளர்
Published on

இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை தொடர் அக்டோபர் 5-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உலக கோப்பை தொடரில் விராட் கோலியின் விக்கெட்டை கண்டிப்பாக வீழ்த்துவேன் என இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஐபிஎல் தொடர் மற்றுமல்லாமல் மற்ற போட்டியிலும் விராட் கோலியின் விக்கெட்டை என்னால் வீழ்த்த முடியவில்லை. ஆனால் உலக கோப்பையில் அவரின் விக்கெட்டை வீழ்த்துவதே என்னுடைய இலக்கு. எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

என்னிடம் எந்த ரகசியமும் இல்லை. டி20 போட்டிகளில், நான் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு 1 ரன்களை வழங்க முயற்சிக்கிறேன். ஒரு ரன் எடுப்பதால் யாரும் திருப்தி அடைவதில்லை. 50 ஓவர்களில், மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். விக்கெட்டுகளைப் பெறுவதற்கு சில தந்திரங்களைச் செய்ய வேண்டும். பவர்பிளேயில் பந்துவீசுவது டெத் ஓவர்களில் பந்து வீசுவது வேறு விதமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com