ரஞ்சி டிராபி தொடர்: தேடி வந்த கேப்டன் பதவியை உதறிய விராட்- காரணம் இதுதான்

விராட் கோலிக்கு கேப்டன் பதவியை வழங்க டெல்லி மாநில கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்து அவரிடம் கூறியது. விராட் கோலி அந்த பதவி வேண்டாம் என்றும் சாதாரண ஒரு வீரராக விளையாட விருப்பப்படுகிறேன் என கூறியுள்ளார்.
ரஞ்சி டிராபி தொடர்: தேடி வந்த கேப்டன் பதவியை உதறிய விராட்- காரணம் இதுதான்
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி கடந்த சில தொடர்களாகவே மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தி வருவதால் அவர் மீது பெரிய அளவில் விமர்சனம் எழுந்தது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒரே மாதிரியாக தொடர்ச்சியாக ஆட்டம் இழந்தது பலரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியது.

இதன் காரணமாக தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லி அணிக்காக ரஞ்சி தொடரில் விளையாட விராட் கோலி முடிவு செய்துள்ளார். மேலும் தனது பேட்டிங்கில் சிறிய சிறிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பதற்காக முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கருடன் இணைந்து அவர் பயிற்சி எடுத்து வருகிறார்.

இந்நிலையில் மீண்டும் 12 ஆண்டுகள் கழித்து ரஞ்சி போட்டியில் விளையாட இருக்கும் முன்னாள் இந்திய கேப்டனான விராட் கோலியை வேறொருவரின் தலைமைக்கு கீழ் விளையாட வைக்காமல் அவருக்கு கேப்டன் பதவியை வழங்க டெல்லி மாநில கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்து அவரிடம் கூறியது.

ஆனால் அதனை மறுத்த விராட் கோலி அந்த பதவி வேண்டாம் என்றும் சாதாரண ஒரு வீரராக விளையாட விருப்பப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார். தற்போது உள்ள சூழலில் டெல்லி அணியில் எந்தெந்த வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்று தனக்கு தெரியாது என்றும் அதன் காரணமாக தானும் அணியில் ஒரு அங்கமாக இணைந்து சாதாரண வீரராக விளையாட விரும்புவதாகவும் விராட் கோலி கூறியுள்ளாராம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com