நன்றி கூறிய புகைப்பட கலைஞர்கள்.. மனைவி தான் காரணம் என்ற கோலி - வைரல் வீடியோ

புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். நியூ யார்க் புறப்படுவதற்காக விமான நிலையம் வந்தார்.
நன்றி கூறிய புகைப்பட கலைஞர்கள்.. மனைவி தான் காரணம் என்ற கோலி - வைரல் வீடியோ
Published on

உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி. இவர் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இந்த தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.

குழந்தை பிறப்பு மற்றும் குழந்தைக்கு அவர்கள் சூட்டிய பெயரை அறிக்கை வாயிலாக அறிவித்த விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஜோடி, இந்த நேரத்தில் தங்களுக்கு தனிமை அவசியம் என்றும் பொது வெளியில் தங்களது குழந்தைகளை யாரும் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.

இந்த நிலையில், தங்களது கோரிக்கைய ஏற்று தனியுரிமையை பாதுகாத்ததற்காக புகைப்பட கலைஞர்களுக்கு விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்வதற்காக விராட் கோலி இந்தியாவில் இருந்து நியூ யார்க் புறப்படுவதற்காக விமான நிலையம் வந்தார்.

தங்களுக்கு வழங்கப்பட்ட பரிசுக்கு விமான நிலையத்தில் வைத்து புகைப்பட கலைஞர்கள் விராட் கோலியிடம் நன்றி தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த விராட் கோலி அவை தனது மனைவியின் ஏற்பாடு என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com