ஹர்மன்பிரித், ரிச்சா கோஷ் அதிரடி: இந்திய அணி 201 ரன்கள் குவிப்பு

டாஸ் வென்ற யு.ஏ.இ. அணி பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் ஆடிய இந்தியா 201 ரன்களைக் குவித்தது.
ஹர்மன்பிரித், ரிச்சா கோஷ் அதிரடி: இந்திய அணி 201 ரன்கள் குவிப்பு
Published on

தம்புல்லா:

9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகமும், 'பி' பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்தும் இடம் பிடித்துள்ளன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதில் இந்திய நேரப்படி இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்தியா, யு.ஏ.இ அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற யு.ஏ.இ. அணி பந்து வீசுவதாக அறிவித்தது.

அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஷபாலி வர்மா, ஸ்மிர்தி மந்தனா தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

மந்தனா 13 ரன்னிலும், ஹேமலதா 2 ரன்னிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 14 ரன்னிலும் அவுட்டாகினர். ஷபாலி வர்மா 37 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

5-வது விக்கெட்டுக்கு இணைந்த ஹர்மன்பிரித் கவுர், ரிச்சா கோஷ் ஜோடி அதிரடியாக ஆடியது. ஹர்மன்பிரித் அரை சதம் கடந்தார்.

இந்த ஜோடி 75 ரன் சேர்த்த நிலையில் கவுர் 66 ரன்னில் வெளியேறினார்.

கடைசி ஓவரில் ரிச்சா கோஷ் 5 பவுண்டரிகள் விளாசியதுடன் அரை சதம் கடந்தார்.

இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 201 ரன்களைக் குவித்தது. ரிச்சா கோஷ் 64 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யு.ஏ.இ. அணி களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com