டி.என்.பி.எல். கிரிக்கெட்- 39 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி

சேலம் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.மதுரை அணி சார்பில் சிலம்பரசன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 ரகுபதி சிலம்பரசன்
 ரகுபதி சிலம்பரசன்
Published on

6-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட்டின் அடுத்த கட்ட போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் சேலம் அணியை மதுரை அணி எதிர்கொண்டது.

டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான அருண் கார்த்திக் 13 ரன்னிலும், ராஜ்குமார் 29 ரன்னிலும், விக்னேஷ் அய்யர் 16 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய கேப்டன் சதுர்வேதியுடன், விக்கெட் கீப்பர் ஈஸ்வரன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடினர்.

ஈஸ்வரன் 27 பந்தில் 3 சிக்சர், 3 பவுண்டரியுடன் 41 ரன்கள் எடுத்தார். சதுர்வேதி 34 ரன்னில் வெளியேறினார். இறுதியில், மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 166 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து விளையாடிய சேலம் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.

அந்த அணி சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கோபிநாத் 15 ரன்களிலும் அபிஷேக் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். டேரில் பெராரியோ 19 ரன்கள், கேப்டன் முருகன் அஸ்வின் 10 ரன்கள், ஜாஃபர் ஜமால் 13 ரன்களில் அவுட்டாகினர். அதிகபட்சமாக பிரனவ் குமார் 25 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

இதையடுத்து 39 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது. மதுரை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ரகுபதி சிலம்பரசன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும் ராக்கி மற்றும் சரவணன் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். சன்னி சந்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com