ரோஹித் சர்மாவிடம் கேப்டன்சி தொடர்பாக கற்றுக் கொண்டது என்ன? விவரிக்கும் திலக் வர்மா

ரோகித் சர்மா உடன் நான் எப்போதும் உரையாடிக்கொண்டிருப்பேன். நாங்கள் பேட்டிங் பற்றி அதிகம் பேசுவதில்லை. ஆனால் கேப்டன்சி குறித்து நிறைய பேசுவோம் என்று திலக் வர்மா தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மாவிடம் கேப்டன்சி தொடர்பாக கற்றுக் கொண்டது என்ன? விவரிக்கும் திலக் வர்மா
Published on

இந்திய டி20 அணியின் அதிரடி டி20 பேட்ஸ்மேனாக திலக் வர்மா திகழ்ந்து வருகிறார். இவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா உடன் நீண்ட காலமாக இணைந்து விளையாடி வருகிறார். தற்போது திலக் வர்மா டி20 இந்திய அணியின் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ரோகித் சர்மாவிடம் கேப்டன்சி குறித்து கற்றுக் கொண்டதாக திலக் வர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திலக் வர்மா கூறியதாவது:-

ரோகித் சர்மா உடன் நான் எப்போதும் உரையாடிக்கொண்டிருப்பேன். நாங்கள் பேட்டிங் பற்றி அதிகம் பேசுவதில்லை. ஆனால் கேப்டன்சி குறித்து நிறைய பேசுவோம். அவரை உற்று கவனிப்பதன் மூலமே நான் பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன். அவரது மனநிலை எப்படிச் செயல்படுகிறது, அழுத்தமான சூழல்களை அவர் எப்படிக் கையாளுகிறார், அவரது சிந்தனை முறை என்ன என்பது போன்றவற்றை அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வேன்.

அத்தகைய நுணுக்கமான விஷயங்களையே நான் கற்றுக்கொள்ள முயல்கிறேன். அவர் எனக்கு வழிகாட்டுதல்களையும் வழங்குகிறார். அந்த அனுபவத்தை நான் 'இந்தியா ஏ' (India A) அணிக்கான போட்டிகளிலும் பயன்படுத்திக்கொள்கிறேன். சரியான நேரத்தில் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து அதே பாணியில் சிறப்பாகச் செயல்பட முயற்சிப்பேன்.

இவ்வாறு திலக் வர்மா தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com