#T20WorldCup அரையிறுதி: இங்கிலாந்துக்கு 254 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 89 ரன்கள் விளாசி அவுட்டானார்
#T20WorldCup அரையிறுதி: இங்கிலாந்துக்கு 254 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
Published on

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

கொல்கத்தாவில் நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.

இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 9 ரன்னில் அவுட்டானார். சஞ்சு சாம்சன் 15 ரன்கள் அடித்திருந்தபோது கொடுத்த கேட்சை இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் தவறவிட்டார்

இதையடுத்து சிறப்பாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் 18 பந்துகளில் 39 ரன்கள் அடித்து அவுட்டானார்.

இதையடுத்து அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 89 ரன்கள் குவித்து அவுட்டானார். கடந்த போட்டியில் 97 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்த சஞ்சு சாம்சன் இந்த போட்டியிலும் சதம் அடிக்காததது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

சிறப்பாக விளையாடிய சிவம் துபே 25 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். கடைசி நேரத்தில் சிக்ஸர்களை பறக்கவிட்ட திலக் வர்மா 7 பந்துகளில் 21 ரன்கள் அடித்து அவுட்டானார்.

கடைசி ஓவரில் சிக்ஸர்களை பறக்கவிட்ட ஹர்திக் பாண்ட்யா 11 பந்துகளில் 26 ரன்கள் விளாசி அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 253 ரன்களை குவித்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com