திலக்- பாண்ட்யா அதிரடி: ஜிம்பாப்வே அணிக்கு 257 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் எடுத்தது.
திலக்- பாண்ட்யா அதிரடி: ஜிம்பாப்வே அணிக்கு 257 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
Published on

டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் குரூப் 1 பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜிம்பாப்வே அணியுடன் மோதுகிறது.

இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன், அக்ஷர் படேல் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரின் 2-வது பந்தில் சிக்சரை பறக்க விட்டு தனது அதிரடியை சாம்சன் தொடங்கினார். தொடர்ந்து விளையாடிய அவர் 15 பந்தில் 24 ரன்கள் எடுத்தார்.

இதனை தொடர்ந்து அபிஷேக் மற்றும் இஷான் கிஷன் சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடியின் அதிரடியால் பவர்பிளேயில் 80 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து விளையாடிய இஷான் கிஷன் 38 ரன்களில் வெளியேறினார். தொடர்ச்சியாக 3 முறை டக் அவுட் ஆகிய அபிஷேக் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 30 பந்தில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் 13 பந்தில் 33 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இதனையடுத்து ஹர்திக் மற்றும் திலக் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஹர்திக் 23 பந்தில் 50 ரன்களும் திலக் 16 பந்தில் 44 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் எடுத்தது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com