297 விளாசிய மகன்.. 23 ரன்களில் பறிபோன பெராரி.. விரேந்திர சேவாக் பதிவு

தலில் பேட் செய்த மேகாலயா 260 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. மேகாலயா - டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் ஷில்லாங்கில் நடந்தது.
297 விளாசிய மகன்.. 23 ரன்களில் பறிபோன பெராரி.. விரேந்திர சேவாக் பதிவு
Published on

கூச் பெஹார் கோப்பைக்கான கிரிக்கெட்டில் மேகாலயா - டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் (4 நாள் ஆட்டம்) மேகாலயாவில் உள்ள ஷில்லாங்கில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த மேகாலயா 104.3 ஓவர்களில் 260 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய டெல்லி அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய இந்திய முன்னாள் அதிரடி வீரர் சேவாக்கின் மகனான ஆர்யவீர் 51 பவுண்டரி, 3 சிக்சருடன் 297 ரன்கள் (309 பந்து) விளாசினார்.

இவரது இன்னிங்ஸ் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட விரேந்திர சேவாக், "நன்றாக விளையாடினாய் ஆர்யவீர். 23 ரன்களில் ஃபெராரியை தவறவிட்டாய். ஆனால் சிறப்பாக செயல்பட்டாய், தீயை உனக்குள் உயிர்ப்புடன் வைத்திரு. நீ மேலும் பல டாடி சதங்கள். இரட்டை சதங்கள் மற்றும் முச்சதங்களை அடிப்பாய்," என குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com