டிஎன்பிஎல்: மதுரை அணியிடம் போராடி தோற்றது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரதோஷ் அரை சதம் விளாசினார்.மதுரை தரப்பில் கார்த்திக் மணிகண்டன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டிஎன்பிஎல்: மதுரை அணியிடம் போராடி தோற்றது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
Published on

8-வது டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி முதலில் விளையாடிய மதுரை அணியில் லோகேஸ்வர் அரைசதம் விளாசினார். அவரை தொடர்ந்து நிஷாந்த 37, சரவணன் 25, கவுசிங் 43 என ரன்கள் எடுத்தனர். இதனால் மதுரை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்தது.

சேப்பாக் தரப்பில் அபிஷேக், பாபா அப்ரஜித், சிலம்பரசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

இதனையடுத்து சேப்பாக் அணியின் தொடக்க வீரர்களாக ஜெகதீசன் - சந்தோஷ் குமார் களமிறங்கினர். இதில் 6 ரன்னில் ஜெகதீசன் அவுட் ஆனார். அடுத்து வந்த அப்ராஜித் அதிரடியாக விளையாடி 2 சிக்சர் 1 பவுண்டரி விளாசி 17 ரன்னில் வெளியேறினார்.

இதனை தொடர்ந்து சந்தோஷ் - பிரதோஷ் ரஞ்சன் பால் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். சந்தோஷ் 48 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரதோஷ் (52) அரை சதம் விளாசி அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார்.

இதனால் சேப்பாக் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. இதனால் மதுரை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மதுரை தரப்பில் கார்த்திக் மணிகண்டன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com