டிஎன்பிஎல்: சேப்பாக் அணிக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மதுரை

அதிரடியாக விளையாடிய லோகேஸ்வர் 55 ரன்கள் விளாசினார்.சேப்பாக் தரப்பில் அபிஷேக், பாபா அப்ரஜித், சிலம்பரசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
டிஎன்பிஎல்: சேப்பாக் அணிக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மதுரை
Published on

8-வது டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி மதுரை அணியின் தொடக்க வீரர்களாக லோகேஸ்வர்- நிஷாந்த் களமிறங்கினர். இதில் லோகேஸ்வர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். இதனால் பவர் பிளேயில் 51 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய லோகேஸ்வர் அரைசதம் விளாசினார். அவர் 55 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்த சிறிது நேரத்தில் நிஷாந்த 37 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த சரவணன் அதிரடியாக விளையாடிய 13 பந்தில் 25 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து சசிதேவ் 2 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து கவுசிங்- சதுர்வேத் அதிரடியாக விளையாடினர். இதனால் மதுரை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்தது.

சேப்பாக் தரப்பில் அபிஷேக், பாபா அப்ரஜித், சிலம்பரசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com