சிக்சர் மழை.. வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம்

இந்திய அணி 10 ஓவர்களிலேயே 150 ரன்களை கடந்தது. சாம்சன் - சூர்யகுமார் ஜோடி 150 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து அதிரடியாக விளையாடி வருகிறது.
sanju samson
Published on

இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் களம் இறங்கினர். 4 ரன்களில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சாம்சன் - சூர்யகுமார் வங்கதேச பந்துவீச்சை நாளா பக்கமும் சிதறடித்தனர்.

அதிரடியாக விளையாடிய இந்திய அணி 10 ஓவர்களிலேயே 150 ரன்களை கடந்தது. அதிரடியாக விளையாடி சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் அதிரடி சதம் அடித்தார்.

இன்னொரு பக்கம் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து அசத்தினார். 150 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து இந்த ஜோடி அதிரடியாக விளையாடி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com