ரோகித் சர்மா தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை - பயிற்சியாளர்

இந்த சரிவு விமர்சகர்களிடையே பல கேள்விகள் எழ வழிவகுத்துள்ளது.
ரோகித் சர்மா தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை - பயிற்சியாளர்
Published on

முன்னாள் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் ஆரம்பகால பயிற்சியாளரான தினேஷ் லாட், ரோகித் தனது உடற்தகுதி மற்றும் ஃபார்ம் குறித்து கேள்வி எழுப்பும் விமர்சகர்களை புறக்கணித்து, அடுத்த ஆண்டு தனக்கு பிடித்தமான உலகக் கோப்பை வடிவத்தில் வலுவாக திரும்புவதற்காக தனது ஆட்டத்தை ரசித்து விளையாட வேண்டும் என்று நம்புகிறார்.

ரோகித் தனது சமீபத்திய ஒருநாள் போட்டிகளில் சரிவை சந்தித்துள்ளார்; நியூசிலாந்துக்கு எதிரான தனது கடைசி ஒருநாள் போட்டியில் மூன்று இன்னிங்ஸ்களில் வெறும் 61 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த சரிவு விமர்சகர்களிடையே பெரும் கேள்விகள் எழ வழிவகுத்துள்ளது.

"ஒரு பயிற்சியாளராக, அவர் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அவர் ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். நான் அவரிடம் பேசியுள்ளேன், தனது தொழில் வாழ்க்கையில் என்ன வேண்டும் என்பதில் அவர் மிகவும் தெளிவாக இருக்கிறார்.

அவர் தனது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. வயது ஒரு காரணியாக இருந்தாலும், அவர் இன்னும் போதுமான உடற்தகுதியுடன் இருக்கிறார்," என்று லாட் பி.டி.ஐ. வீடியோஸ்-க்கு அளித்த பேட்டியில் கூறினார்.

"விமர்சகர்கள் பேசிக்கொண்டே இருக்கட்டும். அது அவர்களின் வேலை. நாம் இறுதி போட்டிக்கு செல்ல விரும்பினால், இந்தியாவுக்கு ரோகித்தின் அனுபவம் தேவை. நுட்பத்தைப் பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. மேலும், 50 ஓவர் கிரிக்கெட்டில், நீங்கள் சற்று நிலைபெற வேண்டும்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com