சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட கான்வே.. நன்றி தெரிவித்து பதிவு

5 பேரை சிஎஸ்கே அணி தக்கவைத்துள்ளது.2 வருடமாக சிஎஸ்கே அணிக்காக கான்வே விளையாடி உள்ளார்.
சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட கான்வே.. நன்றி தெரிவித்து பதிவு
Published on

ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக ஐந்து வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முடிவு செய்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி, தற்போதைய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, மதீஷா பத்திரனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்து நியூசிலாந்து வீரர் கான்வே விடுவிக்கப்பட்டார். 2 வருடம் ஆதரவளித்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் கடந்த 2 ஆண்டுகளாக எனக்கு தொடர்ந்து ஆதரவளித்த விசுவாசமான சிஎஸ்கே ரசிகர்களுக்கு நன்றி என பதிவிட்டிருந்தார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கான்வே ஏலத்தில் வரும் பட்சத்தில் இவரை ஏலம் எடுக்க அனைத்து அணிகளும் மல்லுகட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டேவான் கான்வே காயம் காரணமாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com