ஆர்சிபி வீராங்கனைக்கு காதல் வலை விரித்த ரசிகர்- மகளிர் கிரிக்கெட்டில் சுவாரஸ்யம்

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பெங்களூரு அணியின் ரசிகர் ஒருவர் ஆர்சிபி வீராங்கனையான ஸ்ரேயங்கா பாட்டீலுக்காக ஒரு பேனர் வைத்துள்ளார்.
ஆர்சிபி வீராங்கனைக்கு காதல் வலை விரித்த ரசிகர்- மகளிர் கிரிக்கெட்டில் சுவாரஸ்யம்
Published on

பெங்களூரு:

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2-வது சீசன் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. பெங்களூருவில் நேற்று நடந்த ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதனபடி முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய பெங்களூரு அணி 12.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 110 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிபட்டியலில் பெங்களூரு அணி முதல் இடத்தை பிடித்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் சுவாரஸ்யமான விசயம் ஒன்று நடந்துள்ளது. பெங்களூரு அணியின் ரசிகர் ஒருவர் ஆர்சிபி வீராங்கனையான ஸ்ரேயங்கா பாட்டீலுக்காக ஒரு பேனர் வைத்துள்ளார். அதில் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என எழுதியிருந்தது. இது மைதானத்தில் இருக்கும் பெரிய திரையில் காண்பிக்கப்பட்டது. இதனை பார்த்த ஆர்சிபி வீராங்கானைகள் சிரித்தப்படி அதனை பார்த்தனர். அதில் ஸ்ரேயங்காவும் ஒருவர். 

ஐபிஎல் போட்டியில் விராட் கோலியை திருமணம் செய்ய ஆசை படுவதாக நிறைய ரசிகைகள் பேனர் வைப்பதுண்டு. அந்த வகையில் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com