வெஸ்ட் இண்டீஸ் வெற்றி நாயகனுக்கு குறிவைக்கும் ஆர்சிபி

17-வது ஐ.பி.எல். டி20 போட்டிக்கான அட்டவணை இதுவரை அறிவிக்கப்படவில்லை.27 ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றியை பதிவு செய்வதற்கு சமர் ஜோசப் முக்கிய பங்காக இருந்தவர்.
வெஸ்ட் இண்டீஸ் வெற்றி நாயகனுக்கு குறிவைக்கும் ஆர்சிபி
Published on

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் இந்தப் போட்டி மார்ச் முதல் மே மாதம் வரை நடத்தப்படுகிறது. 17-வது ஐ.பி.எல். டி20 போட்டிக்கான அட்டவணை இதுவரை அறிவிக்கப்படவில்லை. பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) போட்டி அட்டவணையை அறிவிக்க முடியாமல் இருக்கிறது.

இந்த ஐபிஎல் சீசனில் கழற்றி விடப்பட்ட வீரர்களுக்கு பதிலாக புதிய வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் துபாயில் நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தற்போதைய நாயகனாக வலம் வரும் சமர் ஜோசப்பை ஆர்சிபி அணி வாங்குவதற்கு திட்டம் தீட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2024-ம் ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியால் ஏலம் எடுக்கப்பட்ட டாம் கரண் காயம் காரணமாக விளையாடமுடியாத சூழல் இருப்பதால் அவருக்கு பதிலாக ஜோசப்பை எடுக்க ஆர்சிபி திட்டம் தீட்டியுள்ளது.

27 ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றியை பதிவு செய்வதற்கு சமர் ஜோசப் முக்கிய பங்காக இருந்தவர். அவர் அந்த போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com