ஆர்.சி.பி. கேப்டன் ரஜத் படிதாருக்கு காயம்: 4 மாதங்கள் விளையாட முடியாது எனத் தகவல்

தென்ஆப்பிரிக்கா ஏ அணிக்கெதிராக முதல் போட்டியில் விளையாடும்போது காயம்.ஐ.பி.எல். போட்டிக்கு முன்னதாக தயாராகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்.சி.பி. கேப்டன் ரஜத் படிதாருக்கு காயம்: 4 மாதங்கள் விளையாட முடியாது எனத் தகவல்
Published on

ஐபிஎல் டி20 லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் படிதார் இருந்து வருகிறார். இவர் தலைமையில் 2025-ல் ஆர்.சி.பி. அணி முதன்முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்று சாதனைப் படைத்தது.

மிடில் ஆர்டர் வரிசை பேட்ஸ்மேனான இவர் ரஞ்சி டிராபியில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்தியா 'ஏ'- தென்ஆப்பிரிக்கா 'ஏ' அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டிக்கான இந்தியா 'ஏ' அணியில் ரஜத் படிதார் இடம் பிடித்திருந்தார்.

முதல் போட்டியில் விளையாடும்போது, ரஜத் படிதாருக்கு காயம் ஏற்பட்டது. இந்த காயம் குணமடைய சுமார் 4 மாதங்களாகும் எனத் தெரிகிறது. இதனால் வரவிருக்கின்ற ரஞ்சி போட்டிகளில் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 2026 ஐ.பி.எல். லீக் தொடர் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் தொடங்கும். அதற்கு தயாராகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com