ஐ.பி.எல் டி20- டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு

ஐபிஎல் போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன.லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் அணியை வழிநடத்துகிறார்.
ஐ.பி.எல் டி20- டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு
Published on

17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி, முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் - லக்னோ அணிகள் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மோத உள்ளன.

கடந்த ஆண்டு 5-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் களம் இறங்குகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளும் தொடர்ச்சியாக 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் அணியை வழிநடத்துகிறார்.

இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com