எனது சொந்த ஊரில் அஸ்வின் அந்த மகத்தான சாதனையை படைப்பதே விதி- ஜடேஜா

முதல் டெஸ்ட் போட்டியிலேயே அதை நிகழ்த்துவார் என நினைத்தேன். எனது சொந்த ஊரான ராஜ்கோர்ட்டில் அஸ்வின் அந்த சாதனையை படைக்க வேண்டும் என்பதே விதி.
எனது சொந்த ஊரில் அஸ்வின் அந்த மகத்தான சாதனையை படைப்பதே விதி- ஜடேஜா
Published on

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (15-ந்தேதி) தொடங்குகிறது.

இந்நிலையில் எனது சொந்த ஊரான ராஜ்கோர்ட்டில் அஸ்வின் தனது 500-வது விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்பதே விதி என ஜடேஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

அஸ்வினுடன் நிறைய ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன். அவருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் தனது 500-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்துவார். முதல் டெஸ்ட் போட்டியிலேயே அதை நிகழ்த்துவார் என நினைத்தேன். பரவாயில்லை எனது சொந்த ஊரான ராஜ்கோர்ட்டில் அஸ்வின் அந்த சாதனையை படைக்க வேண்டும் என்பதே விதி.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com