மகளிர் டி20 உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்

டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 116 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
மகளிர் டி20 உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்
Published on

ஷார்ஜா:

9-வது மகளிர் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி வங்கதேசம் வென்றது.

இந்நிலையில், இன்று நடந்த 2வது போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 116 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் பாத்திமா சனா அதிகபட்சமாக 30 ரன் எடுத்தார்.

இலங்கை அணி சார்பில் பிரபோதனி, சுகந்திகா குமாரி, சமாரி அடப்பட்டு தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

117 ரன்கள் எடுத்தால் வெற்ரி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. அந்த அணியின் வீராங்கனைகள் விரைவில் அவுட் ஆகினர்.

இறுதியில், இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 85 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் சார்பில் சாடியா இக்பால் 3 விக்கெட்டும், பாத்திமா சனா, ஒமைமா சோகைல், நர்ஷா சாந்து தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com