எம்.எஸ்.டோனிக்கு முழங்காலில் வெற்றிகரமாக நடந்து முடிந்த அறுவை சிகிச்சை

மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் எம்.எஸ்.டோனி அனுமதிக்கப்பட்டார். நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் இடது முழங்காலில் வலியுடனேயே டோனி விளையாடி வந்தார்.
எம்.எஸ்.டோனிக்கு முழங்காலில் வெற்றிகரமாக நடந்து முடிந்த அறுவை சிகிச்சை
Published on

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இந்த சீசனில் முதல் முறையாக 3 நாட்கள் ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்தது. அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது.

இதன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இந்த தொடரின் லீக் போட்டிகளில் டோனி விளையாடும் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது.

சில போட்டிகளில் கீப்பிங் செய்யும்போது அதை காண முடிந்தது. அந்த காயத்துடன் தற்காலிகமாக சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் இறுதிப்போட்டி வரை அவர் வலியுடனே விளையாடினார்.

இதையடுத்து, முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக டோனி இன்று மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், எம்.எஸ்.டோனிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com