ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய சிஎஸ்கே ரசிகர்கள்- வைரலாகும் வீடியோ

சிஎஸ்கே அணிக்கு எதிராக ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது சென்னை அணி.
ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய சிஎஸ்கே ரசிகர்கள்- வைரலாகும் வீடியோ
Published on

மும்பை:

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கெய்க்வாட் 69 ரன்களும், ஷிவம் துபே 66 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். ஆனால் மற்ற வீரர்கள் சொதப்பியதால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.

மும்பையில் நடந்த இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு இணையாக சிஎஸ்கே ரசிகர்களும் மைதானத்தில் இருந்தனர். இறுதியில் வெற்றி சென்னை பக்கம் தான் என கிட்டத்தட்ட முடிவாகியது. அந்த சமயத்தில் ரோகித் சர்மா சதம் அடித்தார்.

உடனே சுற்றியிருந்த மும்பை ரசிகர்கள் உள்பட சிஎஸ்கே ரசிகர்கள் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். குறிப்பாக சிஎஸ்கே அணியின் ஜெர்சி அணிந்திருந்த ஒரு ரசிகர் மும்பை சா ராஜா ரோகித் சர்மா என முழக்கமிட்டார். மேலும் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக சிஎஸ்கே ரசிகை மும்பை இந்தியன்ஸ் கொடியை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

சென்னை ரசிகர்கள் மும்பை அணியின் முன்னாள் கேப்டனுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com