ஷாருக் கான் அரை சதம்: மதுரை வெற்றிபெற 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கோவை

டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.அதன்படி, முதலில் ஆடிய கோவை 169 ரன்கள் எடுத்துள்ளது.
ஷாருக் கான் அரை சதம்: மதுரை வெற்றிபெற 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கோவை
Published on

கோவை:

டிஎன்பிஎல் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோயம்புத்தூரில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், கோவையில் இன்று நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ், சியாச்செம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, கோவை அணி முதலில் களமிறங்குகியது. தொடக்க ஆட்டக்காரர் ஜிதேந்திர குமார் 17 ரன்னும், சுரேஷ் லோகேஷ்வர் 20 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பாலசுப்ரமணியன் சச்சின் 15 ரன்னும், ஆண்ட்ரி சித்தார்த் 20 ரன்னும், மாதவ பிரசாத் 4 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். கேப்டன் ஷாருக் கான் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.

இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்துள்ளது. ஷாருக் கான் 77 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com