

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
முதல் போட்டி லண்டனின் பழமையான லார்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது.
உலகில் உள்ள மற்ற மைதானத்தை விட லார்ட்ஸ் அதிக டெஸ்ட் போட்டிகளை நடத்தியுள்ளது. கடந்த 1884 முதல் 146 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி, 60 போட்டிகளில் வெற்றியும், 35 போட்டிகளில் தோல்வியும், 51 போட்டிகளில் சமனிலும் முடித்துள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக விளையாடும் பென் ஸ்டோக்ஸ் இதுவரை 245 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதில் அவர் ஒன்பது முறை நான்கு விக்கெட்டுக்ளையும், ஆறு முறை ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இங்கிலாந்தின் முன்னணி பேட்ஸ்மேனான ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது அதிக ரன்கள் எடுத்த வீரராக உள்ளார். மேலும் 14,000 டெஸ்ட் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற இன்னும் 57 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளார்.
அணிகள்:
இங்கிலாந்து அணி: பென் டக்கெட், எமிலியோ கே, ஜேக்கப் பெத்தேல், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஷோயப் பஷீர், ஜோஷ் டங், ஆலி ராபின்சன், கஸ் அட்கின்சன், சோனி பேக்கர்
நியூசிலாந்து அணி: டாம் லேதம்(கேப்டன்), டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் பிளண்டல்(விக்கெட் கீப்பர்), டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், நாதன் ஸ்மித், ஜாகரி ஃபௌல்க்ஸ், பிளேயர் டிக்னர், வில்லியம் ஓ'ரூர்க், ஹென்றி நிக்கோல்ஸ், கிளென் பிலிப்ஸ், கைல் ஜேமிசன், மாட் ஹென்றி.