விராட் கோலிக்கு நாளை மறுதினம் உடற்தகுதி சோதனை: இங்கிலாந்து தொடரில் ஹர்திக் பாண்ட்யா இல்லை

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி இடம் பெற வேண்டுமென்றால், உடற்குதியை நிரூபிக்க வேண்டும். இதற்கான 22-ந்தேதி பெங்களூரு வரவிருக்கிறார்.
விராட் கோலி- ஹர்திக் பாண்ட்யா
விராட் கோலி- ஹர்திக் பாண்ட்யாவிராட் கோலி- ஹர்திக் பாண்ட்யா
Published on

இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு வலது கால் தொடையில் தசைநார் கிழிவு ஏற்பட்டது. இதனால் ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து விலகினார். ஹர்திக் பாண்ட்யா quadriceps strain sustained காயத்தால் அவதிப்பட்டார். இதனால் ஹர்திக் பாண்ட்யாவும் ஆப்கானிஸ்தான தொடரில் இருந்து விலகினார்.

விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா

விரைவில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இருவரும் இடம் பெற வேண்டுமென்றால் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும். ஹர்திக் பாண்ட்யா உடற்தகுதிய நிரூபிக்க வாய்ப்பில்லை. இதனால் இங்கிலாந்து தொடரில் இடம் பெறமாட்டார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

விராட் கோலி காயத்தில் இருந்து சிறப்பான வகையில் மீண்டு வருகிறார். லண்டனில் இருக்கும் விராட் கோலியின் காயம் குறித்து பெங்களூரு சிறப்பு மையத்தின் குழு மதிப்பீடு செய்துள்ளது. காயத்தில் இருந்து மீள்வதற்காக தொடக்க பயிற்சிக்கான திட்டத்தை விராட் கோலியிடம் வழங்கியுள்ளது. அவர் வருகிற 22-ந்தேதி (நாளைமறுதினம்) பெங்களூருவில் சிறப்பு மையத்தில் தன்னுடைய உடற்தகுதியை நிரூபிக்க இருக்கிறார். அதன்பின் உடற்தகுதியை நிரூபித்ததற்கான சான்றிதழை பெறுவார்.

அதன்பின் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற பரிசீலனை செய்யப்படுவார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com