Kavya Maran | ஏலத்தில் வாங்கப்பட்ட பாகிஸ்தான் வீரர்: டிரென்டிங்கில் காவ்யா மாறன்

பிசிசிஐ நடத்தும் ஐ.பி.எல்லில் விளையாட பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அவர்கள் கடைசியாக 2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடினர்.
Kavya Maran | ஏலத்தில் வாங்கப்பட்ட பாகிஸ்தான் வீரர்: டிரென்டிங்கில் காவ்யா மாறன்
Published on

புதுடெல்லி:

இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட தொடர் மோதலுக்கு பின் பாகிஸ்தான் அணி வீரர்கள் பிசிசிஐ நடத்தும் ஐ.பி.எல்.லில் விளையாட தடை விதிக்கப்பட்டது. கடைசியாக 2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிய அவர்கள், அதன்பின் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதில்லை.

இதற்கிடையே, ஐ.பி.எல். அணிகளை நடத்தி வரும் உரிமையாளர்கள் எஸ்ஏ டி20 தொடர் மற்றும் தி ஹண்டரட் தொடரிலும் அணிகளை நடத்தி வருகின்றனர். இந்த தொடர்களிலும் இதுவரை அணி உரிமையாளர்கள் பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் நிராகரித்து வந்தனர்.

இந்நிலையில், சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி உரிமையாளரான காவ்யா மாறன் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அப்ரார் அகமதை ஏலத்தில் எடுத்துள்ளார்.

காவ்யா மாறன் பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்ததை எதிர்த்தும், ஆதரித்தும் சமூக வலைதளங்களில் கருத்துக்களைப்

பதிவிட்டு வருகின்றனர். இதனால் காவ்யா மாறன் டிரென்டிங்காக இருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com