ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை

முதலில் விளையாடிய இலங்கை அணி 99 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 88 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை
Published on

ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று ஆஸ்திரேலியா- இலங்கை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சனா கவிந்தி 19 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் லில்லி பாசிங்த்வைட் 3 விக்கெட்டுகளை விழ்த்தினார்.

இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி மந்தமாக விளையாடினார். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கவோம்ஹே பிரே 24 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம் இலங்கை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறி விட்டது. இருந்தாலும் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய மகிழ்ச்சியில் இலங்கை அணி நாடு திரும்பும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com