எனது வீட்டிற்கு வந்து விட்டேன்- சென்னை வந்த ஜடேஜாவின் வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரி

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி சென்னையில் 8-ந் தேதி நடைபெறுகிறது.
எனது வீட்டிற்கு வந்து விட்டேன்- சென்னை வந்த ஜடேஜாவின் வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரி
Published on

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி அகமதாபாத் மைதானம் தயார் நிலையில் உள்ளது. நாளைய தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் (பிற்பகல் 2 மணி) பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி சென்னையில் 8-ந் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்.

இந்நிலையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டரும் சிஎஸ்கே அணி வீரருமான ஜடேஜா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது வீட்டிற்கு வந்ததாக ஸ்டோரி வைத்துள்ளார். இது தொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com