துஷார், மொஹமது அதிரடி - 4 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சியை வீழ்த்தியது திருப்பூர்

திருச்சி அணியின் சரவணகுமார் 3 விக்கெட் வீழ்த்தினார்.திருப்பூர் அணியின் துஷார் ரஹேஜா அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெறச் செய்தார்.
விக்கெட் வீழ்த்திய திருப்பூர் அணி
விக்கெட் வீழ்த்திய திருப்பூர் அணி
Published on

நெல்லை:

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நெல்லையில் நடைபெற்ற ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய திருச்சி அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. முரளி விஜய் 34 ரன்னும், அமித் சாத்விக் 26 ரன்னிம் எடுத்து வெளியேறினர். கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய சரவணகுமார் 17 ரன்னும், மதிவண்ணன் 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

158 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது.

இதனால் 6 விக்கெட்டுக்கு 98 ரன்களை எடுத்து திணறியது.

அடுத்து இறங்கிய துஷார் ரஹேஜா, மொஹமது ஜோடி பொறுப்புடன் ஆடியது.

இறுதியில், திருப்பூர் அணீ 6 விக்கெட்டுக்கு 158 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. துஷார் ரஹேஜா 26 பந்தில் 42 ரன்னுடனும், மொஹமது 15 பந்தில் 29 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com