மாதவராவ் ஜெயித்தால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தப்பட்டு விட்டது. வேட்பாளர் மரணத்தால் அந்த தேர்தல் ரத்து செய்யப்படமாட்டாது.
சத்யபிரத சாகு
சத்யபிரத சாகு
Published on

சென்னை:

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மரணம் காரணமாக அந்த தொகுதியில் நடந்த தேர்தல் ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தப்பட்டு விட்டது. வேட்பாளர் மரணத்தால் அந்த தேர்தல் ரத்து செய்யப்பட மாட்டாது. அந்த தொகுதியில் பதிவான வாக்குகள் திட்டமிட்டபடி மே 2-ந்தேதி எண்ணப்படும்.

அந்த தொகுதி தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். அதன் அடிப்படையில் தான் அடுத்தகட்ட முடிவுகள் மேற் கொள்ளப்படும்.

மாதவராவ் அந்த தொகுதியில் வெற்றி பெற்றால் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com