ஒரே மைதானத்தில் அதிக சிக்சர்: 4-வது வீரராக ரோகித் சாதனை- முதல் இடத்தில் கோலி

மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை- ஐதராபாத் அணிகள் நேற்று மோதின.இந்த போட்டியில் ரோகித் சர்மா 3 சிக்சர்களை விளாசினார்.
ஒரே மைதானத்தில் அதிக சிக்சர்: 4-வது வீரராக ரோகித் சாதனை- முதல் இடத்தில் கோலி
Published on

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை- ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய மும்பை அணி 18.1 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய ரோகித் சர்மா 16 பந்தில் 26 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்சர்கள் அடங்கும். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா 102 சிக்சர்களை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். மேலும் இந்திய அணிக்காக வான்கடே மைதானத்தில் 19 சிக்சர்களை விளாசி உள்ளார். இரண்டாவது இடத்தில் அந்த அணியின் முன்னாள் வீரர் பொல்லார்ட் (85) உள்ளார்.

ஒரு மைதானத்தில் 100-க்கும் மேற்பட்ட சிக்சர்களை பறக்கவிட்டவர்கள் பட்டியலில் விராட் கோலி (130 சிக்சர்) முதல் இடத்தில் உள்ளார். இவர் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

அதே மைதானத்தில் கிறிஸ் கெய்ல் 127 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும் ஏபி டிவில்லியர்ஸ் 118 சிக்சர்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். 4-வது இடத்தில் ரோகித் சர்மா உள்ளார்.

மேலும் ஒரு அணிக்காக 250 -க்கும் அதிகமாக சிக்சர் விளாசிய 6-வது வீரர் என்ற சாதனையையும் ரோகித் படைத்துள்ளார். அந்த பட்டியலின் முதல் இடத்தில் விராட் (296), கெய்ல் (263), பொல்லார்ட் (258), தோனி (256), ரோகித் (251) ஆகியோர் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com