சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய என்னை ஏன் அனுப்பவில்லை? - மனம் திறந்த நிதிஷ் ராணா

நிதிஷ் ரானா பொறுப்புடன் ஆடி அரை சதம் எடுத்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.சூப்பர் ஓவரில் டெல்லி 4 பந்தில் 13 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய என்னை ஏன் அனுப்பவில்லை? - மனம் திறந்த நிதிஷ் ராணா
Published on

ஐ.பி.எல். 2025 தொடரின் 32-வது போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. அபிஷேக் பொரேல் 37 பந்தில் 49 ரன்னும், கே.எல்.ராகுல் 38 ரன்னும், அக்சர் பட்டேல், ஸ்டப்ஸ் தலா 34 ரன்னும் எடுத்தனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஆர்ச்சர் 2 விக்கெட்டும் தீக்ஷனா, ஹசரங்கா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஜோடி அதிரடியாக ஆடியது. ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்து 51 ரன்னில் அவுட்டானார்.

சஞ்சு சாம்சன் 31 ரன்னில் ரிட்டயர்டு ஹர்ட் ஆனார். நிதிஷ் ரானா பொறுப்புடன் ஆடி அரை சதம் எடுத்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய ராஜஸ்தான் 0.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய டெல்லி 4 பந்தில் 13 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் சார்பில் ஹெட்மயர், பராக், ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர். இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய நிதிஷ் ராணா ஏன் சூப்பர் ஓவரில் களமிறக்கப்படவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக பேசிய நிதிஷ் ராணா, " சூப்பர் ஓவரில் யாரை அனுப்ப வேண்டும் என்று அணி நிர்வாகம் தான் முடிவு செய்யும். இது தனிப்பட்ட நபரின் முடிவு அல்ல. ஹெட்மயர் மற்றும் பராக்கை அனுப்பியது நல்ல முடிவு தான். ஹெட்மயர் எங்கள் அணியின் ஃபினிஷர் என்று அனைவருக்கும் தெரியும். அவர் கடந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com