எனது குரு, வழிகாட்டி தினேஷ் கார்த்திக் - ஜித்தேஷ் சர்மா நெகிழ்ச்சி

விராட் கோலி ஆட்டமிழந்ததும், கடைசி வரை நின்று விளையாட வேண்டும் என்று தோன்றியது. ஜித்தேஷ் சர்மா 33 பந்தில் 85 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
எனது குரு, வழிகாட்டி தினேஷ் கார்த்திக் - ஜித்தேஷ் சர்மா நெகிழ்ச்சி
Published on

ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் சதமடித்து 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 18.4 ஓவரில் 230 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடம்பிடித்து குவாலிபையர் 1 சுற்றுக்கு பெங்களூரு அணி முன்னேறியது. ஜித்தேஷ் சர்மா 33 பந்தில் 85 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

ஆட்டநாயகன் விருதை வென்ற பின்பு பேசிய ஜித்தேஷ் சர்மா, "விராட் கோலி ஆட்டமிழந்ததும், கடைசி வரை நின்று விளையாட வேண்டும் என்பதுதான் மனதில் தோன்றியது. எனது குரு, வழிகாட்டி தினேஷ் கார்த்திக் அண்ணா அதைதான் என்னிடம் தொடர்ந்து கூறுவார். 'உன்னால் முடியும். எந்த ஒரு சூழலாக இருந்தாலும் ஆட்டத்தை முடித்துக் கொடுக்கும் சக்தி உன்னிடம் உள்ளது' என தினேஷ் கார்த்திக் என்னை ஊக்கப்படுத்தி வந்தார். அவரால் தான் இது சாத்தியமானது" என்று உருக்கமாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com