

ஐ.பி.எல். 2026 சீசன் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் இதில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஒவ்வொரு அணிகளும் தலா 14 போட்டிகளில் விளையாட வேண்டும். அதன் அடிப்படையில் முதல் 4 இடங்கள் பிடிக்கும் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
இன்று மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளும் மோதுகின்றன. இத்துடன் லீக் போட்டிகள் முடிவடைகின்றன.
இதுவரை ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இன்னும் ஒரு இடத்திற்கு 3 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நேற்றைய போட்டியில் டSG அணியை வீழ்த்தியதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளேஆஃப் வாய்ப்பை இழந்தது.
இன்றைய முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் வீழ்த்தினால் 8 வெற்றிகளுடன் 4-வது இடத்தை பிடிக்கும். கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் பிளேஆஃப் வாய்ப்பை இழக்கும். ஒருவேளை தோல்வியடைந்தால் பிளேஆஃப் வாய்ப்பை இழக்கும்.
2-வது போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றால், பஞ்சாப்- கொல்கத்தா இடையே ரன்ரேட் கணக்கிடப்படும். அல்லது போட்டியின்போது ரன்களை குறைந்த ஓவரில் அல்லது எதிரணியை குறைந்த ரன்களில் கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்படும். எனினும் கொல்கத்தா அதிக ரன்ரேட் அடிப்படையில் வெற்றி பெற்றாக வேண்டும். ஒருவேளை கொல்கத்தா தோல்வியடைந்தால் பஞ்சாப் கிங்ஸ் பிளேஆஃஃப் சுற்றுக்கு முன்னேறும்.