ஐபிஎல் 2018- வர்ணனையாளராக மாறிய ஏலம் போகாத வீரர்கள்

ஐபிஎல் 11-வது சீசனுக்கான ஏலத்தில் ஏலம் போகாத மூத்த வீரர்கள் வர்ணனையாளராக பணியாற்ற உள்ளனர். #IPL2018
ஐபிஎல் 2018- வர்ணனையாளராக மாறிய ஏலம் போகாத வீரர்கள்
Published on

டெல்லியைச் சேர்ந்த 38 வயது ஆல்-ரவுண்டரான ராஜத் பாட்டியா 95 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 342 ரன்கள் அடித்துள்ளார். 71 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இவரை ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை. வீரரான ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள முடியாத பாட்டியா, வர்ணனையாளராக செயல்பட இருக்கிறார். இவர் டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 3 முறையும், டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஒரு முறையும் விளையாடியவர் பிரக்யான் ஓஜா. 31 வயதான இவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. 92 போட்டிகளில் விளையாடி 89 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். தற்போது ஏலம் போகாததால் வர்ணனையாளராக செயல்பட இருக்கிறார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், புனே வாரியர்ஸ் இந்தியா, டெல்லி டேர்டெவில்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகளுக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டா. இவர் 78 போட்டியில் 68 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்த திண்டா வர்ணனையாளராக செயல்பட இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com