சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐ கதிகலக்கிய ரிஷப் பந்த், விஜய் சங்கர்

ரிஷப் பந்த், விஜய் சங்கர் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 8.5 ஓவரில் 88 ரன்கள் குவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கதிகலங்க வைத்தனர். #IPL2018 #CSKvDD
சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐ கதிகலக்கிய ரிஷப் பந்த், விஜய் சங்கர்
Published on

4-வது வீரராக களம் இறங்கிய ரிஷப் பந்த் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணி பந்து வீச்சாளர்களை திணறடித்தார். அவருக்கு தமிழக வீரர் விஜய் சங்கர் உதவியாக இருந்தார். ரிஷப் பந்த் 45 பந்தில் 79 ரன் எடுத்து (7 பவுண்டரி, 4 சிக்சர்) 17.4 வது ஓவரில் ஆட்டம் இழந்தார்.

அவரது அவுட்டுக்கு பிறகு விஜய் சங்கர் அதிரடியில் ஈடுபட்டார். பிராவோ வீசிய 19-வது ஓவரில் அவர் 3 சிக்சர்கள் அடித்தார். அந்த ஓவரில் 21 ரன் எடுக்கப்பட்டது. கடைசி ஓவரில் 28 ரன் தேவைப்பட்டது. நிகிடி வீசிய அந்த ஓவரில் 2-வது பந்தில் விஜய் சங்கர் சிக்சர் அடித்தார். கடைசி 3 பந்தில் 17 ரன் தேவையாக இருந்தது. 3 பந்திலும் சிக்சர் அடித்து வெற்றியை பெற்றுக் கொடுத்து விடுவாரா? என்ற அச்சம் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com