ஜாஸ் பட்லர் அதிரடி: ஆர்.சி.பி.யை வீழ்த்தியது குஜராத்

முதலில் ஆடிய ஆர்சிபி 20 ஓவரில் 169 ரன்களை எடுத்தது.தொடர்ந்து ஆடிய குஜராத் 170 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
ஜாஸ் பட்லர் அதிரடி: ஆர்.சி.பி.யை வீழ்த்தியது குஜராத்
Published on

பெங்களூரு:

ஐ.பி.எல். தொடரின் 14-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி அணி 42 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அதன்பின் லிவிங்ஸ்டன்-சித்தேஷ் சர்மா ஜோடி ஓரளவு தாக்குப் பிடித்து விளையாடியது.

லிவிங்ஸ்டன் 39 பந்தில் 5 சிக்சருடன் அரைசதம் அடித்து 54 ரன்னில் அவுட்டானார். சித்தேஷ் சர்மா 33 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். டிம் டேவிட் 18 பந்தில் 32 ரன்கள் எடுத்தார்.

குஜராத் அணி சார்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டும், சாய் சுதர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. சுப்மன் கில் 14 ரன்னில் அவுட்டானார். அரை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் சாய் சுதர்சன் 49 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ஆடிய ஜாஸ் பட்லர் 31 பந்தில் அரை சதம் கடந்தார். அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவர் 73 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், குஜராத் அணி 17.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் குஜராத் பெறும் 2-வது வெற்றி இதுவாகும். இது ஆர்சிபி அணி பெற்ற முதல் தோல்வி ஆகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com