பெங்களூரு கூட்ட நெரிசலை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் - BCCI துணை தலைவர்

ஆர்சிபி அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதுஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.
பெங்களூரு கூட்ட நெரிசலை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் - BCCI துணை தலைவர்
Published on

பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஆர்சிபி ஐபிஎல் வெற்றி கொண்டாத்திற்காக கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மன்னிப்பு கோரியுள்ளார்.

இதனிடையே, இந்த கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு மாநில அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "பெங்களூரு கூட்ட நெரிசல் போன்று எந்த மாநிலத்திலும் நடக்கலாம், அதற்காக மாநில அரசுகளை நாம் குற்றம் சுமத்த முடியாது. பாஜக ஆளும் மாநிலங்களில் இதுபோல நடந்தாலும் நாம் அதை அரசியல் செய்ய கூடாது. அதிக அளவிலான மக்கள் வருவார்கள் என ஆர்.சி.பி. அணி நிர்வாகம் எதிர்பார்க்கவில்லை. இந்த துயர சம்பவம் திடீரென நடைபெற்றது" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com