கே.எல்.ராகுல் அதிரடி: ஆர்சிபியை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்

முதலில் ஆடிய ஆர்சிபி 20 ஓவரில் 163 ரன்கள் எடுத்தது.தொடர்ந்து ஆடிய டெல்லி 169 ரன்கள் எடுத்து வென்றது.
கே.எல்.ராகுல் அதிரடி: ஆர்சிபியை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்
Published on

பெங்களூரு:

ஐபிஎல் தொடரின் 24வது லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இதில் ஆர்சிபி, டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. பில் சால்ட், டிம் டேவிட் தலா 37 ரன்கள் எடுத்தனர். ரஜத் படிதார் 25 ரன்னும், விராட் கோலி 22 ரன்னும் எடுத்தனர்.

டெல்லி அணி சார்பில் விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். 58 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

அடுத்து இறங்கிய கே.எல்.ராகுல்- ஸ்டப்ஸ் ஜோடி பொறுப்புடன் ஆடியது. சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் அரை சதமடித்தார்.

இறுதியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் 17.5 ஓவரில் 169 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. டெல்லி அணி பெறும் 4வது வெற்றி இதுவாகும். ஆர்.சி.பி. பெறும் 2வது தோல்வி இதுவாகும்.

கே.எல்.ராகுல் 93 ரன்னும், ஸ்டப்ஸ் 38 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com