ஹர்திக் பாண்ட்யாவுக்கு சி.எஸ்.கே.யின் ஆஃபர்: மும்பை இந்தியன்ஸ் கேட்பது என்ன?

ஹர்திக் பாண்ட்யாவுக்குப் பதிலாக சிஎஸ்கே-யின் 19 வயது இளம் பேட்ஸ்மேனை மும்பை இந்தியன்ஸ் குறி வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Hardik Pandya
ஹர்திக் பாண்ட்யா
Published on

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம் பிடித்துள்ளார். இவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சென்று, பின்னர் 2024 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பினார். அப்போது கேப்டனாக நியமிக்கப்பட்டார். மும்பை அணியில் அவருக்கு சக வீரர்களால் சரியான மரியாதை கிடைக்கவில்லை. அதைவிட அந்த அணி சிறப்பாக செயல்படவில்லை. வீரர்கள் அறையில் அடிக்கடி சலசலப்பு ஏற்பட்டது.

கடந்த 3 சீசனில் மும்பை இந்தியன்ஸ் ஏமாற்றம்

2024-ல் 10-வது இடத்தை பிடித்தது. 2025-ல் பிளேஆஃப் வரை சென்றது. 2026 சீசனில் மிகவும் மோசமான நிலையை எட்டியது. இதனால் ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேற முயன்றார். அதேவேளையில் மும்பை இந்தியன்ஸ் அணியும் அவரை விடுவிடுக்க முடிவு செய்தது.

ஹர்திக் பாண்ட்யாவுக்கு போட்டி

ஹர்திக் பாண்ட்யாவை வாங்க (Trade) பெரும்பாலான அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. தற்போது இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் பேசி வருதாக தகவல் கசிந்துள்ளது.

ஹர்திக் பாண்ட்யாவின் மதிப்பு ஏறக்குறை 20 கோடி ரூபாய் ஆகும். இதனால் ஹர்திக் பாண்ட்யாவை வாங்க வேண்டும் என்றால் அதற்கு மதிப்பான Trade-ஐ மும்பை இந்தியன்ஸ் எதிர்பார்க்கிறது.

மும்பை இந்தியன்ஸ் ஆயுஷ் மாத்ரேவை தாருங்கள். அதனுடன் பணமும் தாருங்கள் எனக் கூறுவதாக தெரிகிறது. ஆயுஷ் மாத்ரே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வளர்ந்து வரும் தலைசிறந்த இளம் பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார். ஸ்டிரைக் ரேட் 180-க்கும் மேல் வைத்துள்ளார்.

ஆயுஷ் மாத்ரே

இதனால் ஆயுஷ் மாத்ரேவை கொடுக்க சி.எஸ்.கே. விரும்பவில்லை. அதேவேளையில் டெவால்டு பிரேவிஸ் மற்றும் ஷிவம் துபே ஆகியோரை வழங்குகிறோம். அத்துடன் பணமும் தருகிறோம் எனத் தெரிவித்ததாக தெரிகிறது.

ஒருவேளை சிஎஸ்கே ஆஃபரை மும்பை இந்தியன்ஸ் ஒப்புக் கொண்டால், ஹர்திக் பாண்ட்யாவுக்குப் பதிலாக சிஎஸ்கே 20 கோடி ரூபாய்க்கு மேலான Trade பணத்தை இழக்க நேரிடும்.

இருந்த போதிலும் இரண்டு அணிகளும் இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com