ஐ.பி.எல். 2026: லீக் சுற்று முடிவில் 8-ஆவது இடத்தில் சி.எஸ்.கே.

குல்தீப் யாதவ் அற்புதமான மூன்று விக்கெட் வீழ்த்தியதன் மூலம் பக்கபலமாக இருந்தார்.
ஐ.பி.எல். கோப்பை
Published on

கடந்த மார்ச் 28-ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவு பெற்றன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கொல்கத்தாவில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் ஃபார்மில் இல்லாத கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல். ராகுலின் அதிரடி அரைசதத்திற்கு குல்தீப் யாதவ் அற்புதமான மூன்று விக்கெட் வீழ்த்தியதன் மூலம் பக்கபலமாக இருந்தார்.

புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்கள்:

இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ஏழு வெற்றிகள் மற்றும் ஏழு தோல்விகளுடன் 14 புள்ளிகளைப் பெற்று, 13 புள்ளிகளுடன் இருக்கும் கே.கே.ஆர். அணியை முந்தியது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB), குஜராத் டைட்டன்ஸ் (GT), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களைப் பிடித்தன.

நேற்று மதியம் (ஞாயிற்றுக்கிழமை) வான்கடே மைதானத்தில் நடந்த மற்றொரு போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிஐ 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, நான்காவது மற்றும் இறுதி பிளேஆஃப் இடத்தை உறுதி செய்தது.

சனிக்கிழமையன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் தொடரில் நீடித்திருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய இரு அணிகளையும் இந்த முடிவு வெளியேற்றியது. அதேவேளையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றியால் டெல்லி அணி ஏற்கனவே வெளியேற்றப்பட்டிருந்தது.

லீக் சுற்று முடிவில் புள்ளிகள் பட்டியலில் அணிகள் நிலவரம்:

1 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

2 - குஜராத் டைட்டன்ஸ்

3 - சன்ரைசர்ஸ் ஐதராபாத்

4 - ராஜஸ்தான் ராயல்ஸ்

5 - பஞ்சாப் கிங்ஸ்

6 - டெல்லி கேபிட்டல்ஸ்

7 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

8 - சென்னை சூப்பர் கிங்ஸ்

9 - மும்பை இந்தியன்ஸ்

10 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

X

Maalai Malar
www.maalaimalar.com