ரோகித் சர்மாவுக்காக வாழ்க்கையை கூட பந்தயம் கட்டுவேன் - பிரீத்தி ஜிந்தா

பஞ்சாப் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. ஒரு கேப்டனை மட்டுமே நாங்கள் இழக்கிறோம்.
ரோகித் சர்மாவுக்காக வாழ்க்கையை கூட பந்தயம் கட்டுவேன் - பிரீத்தி ஜிந்தா
Published on

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது. அந்த அணி கடைசியாக எதிர்கொண்டு விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை தழுவியது. இதன் மூலம் அந்த அணி புள்ளி பட்டியலில் 8 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவன் காயம் காரணமாக விலகியதால், அந்த அணியின் தற்காலிக கேப்டனாக சாம் கர்ரன் நியமிக்கப்பட்டார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதை அடுத்து அந்த அணியின் உரிமையாளரும், நடிகையுமான பிரீத்தி ஜிந்தா பேட்டியளித்தார்.

பேட்டியின் போது பேசிய அவர் பஞ்சாப் அணியில் தற்போது நிலைத்தன்மை மற்றும் சாம்பியன் மனநிலை கொண்ட ஒருவர் இல்லாமல் தவிக்கிறோம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஐ.பி.எல். மெகா ஏலத்தில் ரோகித் சர்மா இடம்பெறும் பட்சத்தில் அவரை அணியில் எடுப்பதற்கு என் வாழ்க்கையை கூட பந்தயம் கட்டுவேன். எங்களது அணியில் நிலைத்தன்மை, சாம்பியன் மனநிலையை கொண்டுவரும் ஒரு கேப்டனை மட்டுமே நாங்கள் இழக்கிறோம்," என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com