ஒரு சிக்சர் அடித்தால் 6 வீடுகளுக்கு சோலார் மின் வசதி- ராஜஸ்தான் அணி அறிவிப்பு

ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. ஒரு சிக்சர் அடித்தால் 6 வீடுகளுக்கு சோலார் மின்சார வசதி வழங்கப்படும் என ஆர்ஆர் அறிவித்துள்ளது.
ஒரு சிக்சர் அடித்தால் 6 வீடுகளுக்கு சோலார் மின் வசதி- ராஜஸ்தான் அணி அறிவிப்பு
Published on

ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் ரசிகர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறது. இதுவரை நடந்து முடிந்த லீக் போட்டிகள் முடிவில் கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் முதல் இரண்டு இடத்தையும் டெல்லி, மும்பை அணிகள் கடைசி இரண்டு இடத்தையும் பிடித்துள்ளன.

இந்நிலையில் நாளை ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேலும் ஒரு அறிவிப்பை ராஜஸ்தான் அணி அறிவித்தது.

அதன்படி இந்த போட்டியில் அடிக்கும் ஒவ்வொரு சிக்சருக்கும் 6 வீடுகளுக்கு சூரிய தகட்டின் மூலம் மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் ராஜஸ்தான் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அம்மாநில மக்கள் வரவேற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com