நரேந்திர மோடி மைதானத்தில் போலீசாரை தாக்கிய பெண்- வைரலாகும் வீடியோ

போலீஸ்காரர் குடிபோதையில் இருந்ததாகவும், அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் சிலர் கூறுகின்றனர். மேலும் சிலர் போலீசாருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நரேந்திர மோடி மைதானத்தில் போலீசாரை தாக்கிய பெண்- வைரலாகும் வீடியோ
Published on

அகமதாபாத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று நடைபெற இருந்தது. ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. இன்று மீண்டும் ஆட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மழை பெய்து கொண்டிருந்த போது ரசிகர்கள் மைதானத்தில் நீண்ட நேரமாக காத்திருந்தனர். அப்போது பெண் ரசிகை ஒருவர் தனக்கு அருகில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவரை தாக்கினார்.

அவர் கீழே விழுந்து மீண்டும் எழுந்தபோதும் அந்த பெண் மறுபடியும் தாக்கினார். ஆனால் அந்த அதிகாரி எதிர்த்து ஏதும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தார். இந்த சண்டை ஏன் நடந்தது என்பது குறித்த சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் இது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.


போலீஸ்காரர் குடிபோதையில் இருந்ததாகவும், அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் சிலர் கூறுகின்றனர். போலீசாரிடம் உடலை சுத்தப்படுத்தியதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் போலீசாருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com